Categories
மாநில செய்திகள்

சென்னையில் திடீர் கனமழை ஏன்….? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்…..!!!

சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.

நேற்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென்று கனமழை பெய்ய தொடங்கியது. ஆனால் வானிலை ஆய்வு மையம் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்த நிலையில் அதற்கு நேர்மாறாக மழை வெளுத்து வாங்கியது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பாதிப்பு இருந்தது. இப்படி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கும் அளவுக்கு எதிர்பாராதவிதமாக பெய்த கனமழை ஏன் என்பது பலரின் கேள்வியாக இருந்தது.

இந்த கேள்விக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.  சென்னையில் நேற்று திடீரென கொட்டி தீர்த்த கன மழைக்கு மேக வெடிப்பு தான் காரணம் என்று பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனை முன்கூட்டியே கணித்திருந்தாலும், கணித போது இருந்ததைவிட கடலிலிருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்பிற்கு மேல் சென்றதன் காரணமாகவே எதிர்பாராதவிதமாக கன மழை கொட்டி தீர்த்தது. சில சமயங்களில் காற்று அதிகமாக வீசினால் வேறு மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேக வெடிப்பு என்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் மழை பெய்யும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டால் மட்டுமே தொடர் மழை பெய்யும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

Categories

Tech |