Categories
Uncategorized உலக செய்திகள்

“விண்வெளியில் செலுத்தப்பட்ட ராக்கெட்”…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!

ஈரான் விண்வெளியில் ராக்கெட்டை செலுத்தியுள்ளதாக கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் 2015-ம் வருடம் ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தமானது அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டால் அந்நாட்டின் மேல் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பின் அங்கு ஜனாதிபதியாக வந்த டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொள்ளவில்லை. இதனிடையில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் 2018-ம் ஆண்டு அறிவித்தார். இதனையடுத்து அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் விண்வெளி திட்டங்களை நிறைவேற்றும் நோக்கில் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஈரான் ராக்கெட் ஒன்றை விண்வெளியில் செலுத்தியது. ஆனால் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஜாபர் என்ற செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்த முடியாமல் போய்விட்டது.
இதுபோன்று அண்மை காலமாக ராக்கெட்டுகளை விண்வெளியில் ஏவி ஈரான் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில் மூன்று  சாதனங்களுடன் 1 செயற்கைக்கோளை பீனிக்ஸ் எனும் புதிய ராக்கெட்டின் மூலமாக ஈரான் விண்வெளியில் செலுத்தியுள்ளது. இது தொடரப்பாக வெளியான செய்தியில், இந்த ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது எப்போது என்றோ, செயற்கைக்கோளில் பொருத்தப்பட்ட சாதனங்கள் பற்றியோ எந்த விதமான தகவலும் வெளியிடவில்லை. அதே சமயம் அந்த செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என்பது குறித்தும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
இதுபற்றி அந்நாட்டின் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான அகமது உசேனி கூறியபோது, “சிமோர்க் அல்லது பீனிக்ஸ் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. மூன்று சாதனங்கள் விண்வெளியில் 470 கி.மீ. தொலைவுக்கு சென்றது” என்று கூறினார். ஈரானின் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து வியன்னாவில் 7வது பேச்சுவார்த்தை நடைபெற்று வரக்கூடிய நிலையில், இந்த ராக்கெட் விண்வெளியில் செலுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |