மாற்றுத்திறனாளி இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.
சென்னை, முகப்பேரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நபரான சூரியராஜ் என்பவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், சூர்யராஜிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். அப்போது மாற்றுத்திறனாளியான சூர்யராஜை தாக்கியதுடன் சிறிது தூரம் அவரை தரதரவென இழுத்து சென்றனர்.
அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை.இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.இதனை அடிப்படையாக வைத்து கொண்டு போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .