வீடுகளில் உள்ள மீட்டர் பெட்டியில் கரண்ட் பில் குறித்த தேதியில் இருந்து 20 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் மின்வினியோகம் துண்டிக்கப்படும். அதன் பிறகு அபாரதத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்திய பிறகு மின்சாரம் வழங்கப்படும். ஒருசிலர் பணிசுமையின் காரணமாக கட்டணம் செலுத்தும் தேதியை மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு செய்ய ஊழியர்கள் செல்லும்போது பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே இதுபோன்ற பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதற்காக மின் துண்டிப்பு செய்யப்படுவது குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதுமட்டுமின்றி மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள நுகர்வோர் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக கடைசி நாளுக்கு முந்தைய இரு தினங்களுக்கு முன் நினைவூட்டல் எஸ்எம்எஸ் ஒன்றும் அனுப்பப்படும்.