சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பிற்பகல் முதல் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் கனமழை காரணமாக மின்சாரம் பாய்ந்து நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் சென்னையில் தி. நகர், மேற்கு மாம்பலத்தில் அதிகளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால், 32 மின்மாற்றிகள் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதன் அடிப்படையில் ஒரு மணி நேரத்தில் மின்வினியோகம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.