ஆசிய அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட இந்தியாவிலுள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இந்தியாவிலுள்ள சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவாக ராஜா என்பவர் உள்ளார். இந்நிலையில் இவர் துருக்கியில் வைத்து நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டுள்ளார்.
அவ்வாறு கலந்துகொண்ட தி.மு.க எம்.எல்.ஏவான ராஜா 140 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதோடு மட்டுமின்றி இவர் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியின் தி.மு க எம்.எல்.ஏவான ராஜா தேசிய அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.