Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டி20 வீரர்களுக்கான விருது ….! பட்டியலில் முகமது ரிஸ்வான் இடம்பிடிப்பு….!!!

2021 -ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி  அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டெஸ்ட் ,டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான டி20 போட்டியில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், இலங்கை அணியில் வநிந்து ஹசரங்கா, ஆஸ்திரேலிய வீரர்   மிட்செல் மார்ஷ், பாகிஸ்தான் வீரர்  முகமது ரிஸ்வான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் இந்த ஆண்டில் 29   டி20 போட்டிகளில் விளையாடி 1326 ரன்கள் குவித்துள்ளார் .இலங்கை அணியின் ஆல் ரவுண்டர்  வநிந்து ஹசரங்கா டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியதோடு நடப்பாண்டில் 37 விக்கெட்டும் 196 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் 627 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 14 டி20 போட்டிகளில் விளையாடி 589 ரன்கள் குவித்துள்ளார்.

Categories

Tech |