தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .அதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4-வது பிடித்துள்ளது .இதுவரை 3 டெஸ்ட் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 4 வெற்றி ஒரு தோல்வி, 2 டிரா என 54 புள்ளிகள் பெற்றுள்ளது.
அதேசமயம் பெனால்டி மூலம் 2 புள்ளிகளை இழந்ததால் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அதிக வெற்றி பெற்ற அணியாக முதலிடத்தில் இருந்தாலும் தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 100% தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இதை அடுத்து இலங்கை 2-வது இடத்திலும் ,பாகிஸ்தான் 75% 3-வது இடத்திலும் ,வெஸ்ட் இண்டீஸ் 5-வது இடத்திலும் மற்றும் நியூசிலாந்து அணி 6-வது இடத்திலும் உள்ளன.