உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்தி ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன் விளைவாக, இங்கிலாந்திலிருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் மேற்கு வங்காள அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்திலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் கொல்கத்தா விமான நிலையம் வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இது மேற்கு வங்காளத்தில் தொற்று வேகமாக பரவ வழிவகுக்கும். அதனால் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இங்கிலாந்திலிருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்காள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.