Categories
உலக செய்திகள்

“ஓமிக்ரான்” ஒரு ஆழிப்பேரலை…. யுத்தம் போல் கழியும் நொடிகள்…. திக்குமுக்காடும் ஐரோப்பிய நாடுகள்….!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் நேற்று மட்டும் சுமார் 2,08,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக அந்நாட்டின் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் நேற்று மட்டும் 2,08,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக அந்நாட்டின் சுகாதார துறை மந்திரியான ஆலிவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் ஒரு ஆழிப்பேரலையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி பிரான்சில் ஒவ்வொரு நொடிக்கும் சுமார் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |