2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம்(நாளை) தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக செய்யுமாறு வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். தாமதமான வரி வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு அவரவர் வருமானத்திற்கு ஏற்ப 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.