Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்….. அதிர்ச்சி தரும் வீடியோ….!!!

சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், சில சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. அதன்படி, மழை நீர் பெருக்கு காரணமாக கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

https://www.youtube.com/watch?v=-hVCxCvmEqs

மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் சிக்கி தவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |