கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளனர்.
அப்போது நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், பொட்டாஷ் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட வேண்டும் எனவும், கோமாரி நோயை கட்டுப்படுத்த நடமாடும் கால்நடை மருந்தகங்கள் ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து லாலாப்பேட்டை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பல கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இதன் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.