Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : 20 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிப்பு …! 3 புதுமுக வீரர்கள் இடம்பிடிப்பு ….!!!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஆட்டங்கள் வருகின்ற 15-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகின்றது. இதில் ‘குரூப் டி’ பிரிவில் தமிழ்நாடு , சவுராஷ்ட்ரா ,ஜம்மு காஷ்மீர் ,ஜார்க்கண்ட் மற்றும் ரயில்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன .

இந்நிலையில் இத்தொடருக்கான விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் துணை கேப்டனாக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு அணியில் சாய் சுதர்‌ஷன், சரவணகுமார் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சிலம்பரசன் ஆகிய புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக அணி:

விஜய்சங்கர் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் , பாபா இந்திரஜித், பாபா அபராஜித், ஜெகதீசன், ஷாருக்கான், சாய் சுதர்சன், ரஞ்சன் பவுல், சூரிய பிரகாஷ், கவுசிக் காந்தி, கங்கா ஸ்ரீதர்ராஜூ, சந்தீப் வாரியர், எம்.முகமது, சிலம்பரசன், சரவணகுமார், அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ், சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த், கவின்.

Categories

Tech |