Categories
சினிமா தமிழ் சினிமா

மாறுவேடத்தில் ரசிகர்களுடன் என்ஜாய் பண்ணிய சாய் பல்லவி…. வைரலாகும் வீடியோ….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் பிரேமம், களி தெலுங்கில் பீடா, தமிழில் மாரி 2 என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அண்மையில் சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் ஷியாம் சிங்கா ராய். இந்த படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கில் தயாரித்து பல மொழிகளில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஷியாம் சிங்கா ராய்.

படத்தில் நடிகர் நானி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்க, சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலின் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் மேயர் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ ராமுலு திரையரங்கில் ரசிகர்களுடன் மாறுவேஷத்தில் ஷியாம் சிங்கா ராய் படத்தை கண்டு ரசித்துள்ளார். யாரும் அடையாளம் காணமுடியாதபடி புர்கா அணிந்து மாறுவேஷத்தில் சாய்பல்லவி திரையரங்குகளில் படம் பார்த்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது அந்த வீடியோ காட்சி இதோ…

Categories

Tech |