Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..இன்று முதல் டோக்கன் வினியோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்றபடி ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தினமும் 200 குடும்ப அட்டைகள் விதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையிலும் மாலையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும். பொதுமக்களை சமூக இடைவெளி கிருமிநாசினி, முக கவசம் போன்றவற்றை கடைப்பிடித்து அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து வீடு வீடாக டோக்கன் கொடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3-ம் தேதி வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பெறும் நாள் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. மேலும் பொங்கல் பரிசுப் பொருளைப் பெறுவதற்கு பொதுமக்களின் கைரேகை பதிவு கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

அதனால் அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் ரேஷன் அட்டையை காண்பித்து கையொப்பமிட்டு பொருள்களை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வெளியூர் சென்று இருந்தாலும் அவர்கள் பின்னர் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது, பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகிக்கும் பணி, சென்னையில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அரசு அறிவித்துள்ளபடி, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நெரிசல் இன்றி குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |