தலைமைச் செயலகம் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் உயிருடன் காப்பாற்றபட்டார் .
மஹாராஷ்டிராவில் பழச்சாறு விற்பனை நிலையம் நடத்திவந்த பிரியங்கா குப்தா என்ற பெண்ணும் அவரது கணவரும் தகராறு ஒன்றில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவர்கள் மீது பொய்வழக்கு போட்டதாகவும் கூறப்படுகிறது .இதற்கு நீதிகேட்கும் விதமாக தலைமைச் செயலகம் வந்த பிரியங்கா குப்தா அலுவலகத்தின் 3வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்தார் .
ஆனால் வளாகத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த வலையில் விழுந்ததால் பத்திரமாக மீட்கப்பட்டார் .ஏற்கனவே ஒருநபர் மாடியில் இருந்து குதித்ததால் பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டிடடத்தை சுற்றிலும் வலை அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .