Categories
உலக செய்திகள்

அதிபரே இப்படி செய்யலாமா?…. “மக்கள் செத்தா பரவாயில்லையா?”…. ஜோ பைடன் செயலால் சர்ச்சை….!!!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அதிபர் ஜோ பைடன் செய்த காரியத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஏற்கனவே தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 1 லட்சமாக இருந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3,09,336 பேருக்கு புதிதாக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க மருத்துவர் நிபுணர்கள், மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்டம் கூட்டமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிபர் ஜோ பைடன் அரசு அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சவுதி, தென்ஆப்பிரிக்கா, நபிபியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது விலக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அதிபர் ஜோ பைடன் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இருப்பதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Categories

Tech |