நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் மும்பை தாஹிசார் பகுதியில் உள்ள SBI வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.