Categories
பல்சுவை

அடடே…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா…. பயனாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதியை வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் அருகில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடை பற்றிய விவரங்களை தேடி அறிந்து கொள்ளலாம். இதற்குகென்று புது இன்டர்பேஸ் உருவாக்கப்படுகிறது. புது அம்சம் பிசினஸ் நியர்பை என அறியப்படுகிறது.

எந்தப் பிரிவில் தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. மேலும் பலர் தேர்வுசெய்யும் பிரிவுக்கு ஏற்ற வகையில் பதில்கள் பட்டியலிடப்படுகின்றன. தற்போது சோதனை அடிப்படையில் இந்த அம்சம் சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இதே அம்சத்தை ஐஓஎஸ் தளத்தில் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |