மதுரை அரசரடி அருகே புது ஜெயில் ரோடு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை என 2 வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் முதல் தளத்தில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் கைதிகள் சிலர் தங்களுடைய உடம்பில் பிளேடுகளால் கிழித்து கொண்டனர். மேலும் சிறைக்கு வெளியே கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.