Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு….!!!

ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் புத்தாண்டின் பொழுது கடற்கரைக்கு செல்ல கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . அதன்படி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்றும், ஆனால் அரசு அறிவித்துள்ள அனைத்துக் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |