தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக பரவி வரும் சூழலில், புத்தாண்டையொட்டி அதிகமாக பரவிவிட கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக முழுவதும் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரவர் குடும்பத்துடன் வீடுகளில் கொண்டாட வேண்டும் என்றும், 31 ஆம் தேதி மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் கைது செய்யப்படுவார்கள். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.