தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை மற்ற பிற நலவாரியங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகராக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக 1.53 கோடி செலவில் உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.