Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது…. டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடற்கரையில் புத்தாண்டு ம்ம்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அவை என்னவென்றால், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது எனவும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் கைது செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் டிசம்பர் 31-ஆம் தேதி நீண்டதூரம் பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது எனவும் ,டிசம்பர் 31 இரவு முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை வரை ரயில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அவரவர் வீடுகளில் தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டை வரவேற்கும்படி டிஜிபி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து ஓட்டல்களில் 22 தடுப்பூசி செலுத்திய ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும். 31-ஆம் தேதி இரவில் பயணிப்பவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை நிறுத்தி பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டில் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெளியூர் செல்பவர்களின் வீடுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் அவசர உதவிக்கு தேவைப்படுவோர் 112 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். மேலும் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக ஆங்கில புத்தாண்டை வரவேற்க காவல்துறைக்கு பொதுமக்களும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |