Categories
கிரிக்கெட் விளையாட்டு

U 19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: போட்டிக்கு நடுவே வந்த கொரோனா…. அதிர்ச்சியில் வீரர்கள் ….!!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது .

19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 32.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தபோது ,நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது .இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள்,  நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது வெளிவந்தது .இதில் நடுவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது .இந்நிலையில் நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் ,பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Categories

Tech |