கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் “பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது .மேலும் அவருக்கு ‘மோனோ க்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் தெரபி’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது “இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் அனுபவமிக்க மருத்துவ குழுவினர் மூலம் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ,அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .49 வயதான கங்குலி 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்தியுள்ளார் .இந்நிலையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.