Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இனி…. பழைய இட ஒதுக்கீட்டு முறையில் கலந்தாய்வு…. அரசு புதிய அதிரடி….!!!!

உயர் நீதிமன்ற தடைக்கு முன்பாக 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பிஇ, பிடெக், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நீதிமன்ற தடை காரணமாக எம்இ, எம்டெக், எம்ஆர்க் எம்பிளான் ஆகிய முதுநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தால் திட்டமிட்டபடி கடந்த நவம்பரில் நடத்த முடியவில்லை. அது மட்டுமல்லாமல் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி சேர்க்கைக்கான கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி எம்பிசி மாணவர்களுக்கு பழைய இட ஒதுக்கீட்டு முறையில் எம்இ, எம் டெக் எம்ஆர்க் மற்றும் மருத்துவம் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

Categories

Tech |