தென்னாப்பிரிக்கா அணிகெதிரான ஒருநாள் தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மாவின் உடற் தகுதியை பொறுத்தே 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது .காயம் காரணமாக ரோகித் சர்மா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தற்போது அவர் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று வருகின்றார். இதனால் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழு கூட்டத்தை இந்த மாத இறுதி வரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது .ஒருவேளை ரோகித் சர்மா காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் ஒருநாள் தொடரை தவறும்பட்சத்தில் கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது .அதே சமயம் நட்சத்திர வீரர்களான ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், ஷாருக்கான் , வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என தெரிகின்றது.