Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் 118 பேருக்கு ஒமைக்ரான்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மருந்து செலுத்தி ஆர்வத்தினால் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் 118 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே தொற்றால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவரும். மேலும் தற்போது வரை ஒமைக்ரான் பாதிப்பில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |