ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு அரசாங்கம் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு போடப்பட்டிருந்த விமான பயண தடையை விலக்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது 100க்கும் மேலான நாடுகளில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அதன்படி சிங்கப்பூர் அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் மிகவும் அவதியுற்ற ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் சிங்கப்பூர் மக்கள் தொடர்ந்து அந்நாட்டிற்கு விமான சேவையை இயக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்கள். அந்த கோரிக்கையை ஏற்ற சிங்கப்பூர் அரசாங்கம் 10 ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விமான பயண தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் தென்னாபிரிக்கா உட்பட 10 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.