ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரத்தனம், ரணம், ரவுத்திரம்’. இதில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அர்ஜுன் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற படவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்த கொண்டார். அப்போது பேசிய அவர் சென்னை சத்யம் தியேட்டரில் ஆறு ஸ்கிரீனில் 5-ல் RRR ரிலீஸ் செய்வோம் என்று மேடையில் வைத்து ராஜமௌலிக்கு உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
