இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் செல்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். இதனையடுத்து அந்த செல்போன் எப்போது வரும் என்று அந்த நபர் காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஐபோனுக்கு பதில் டாய்லெட் பேப்பரால் சுற்றப்பட்ட சாக்லேட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதற்கு முன்பாக அந்த நபர் நேரடியாக ஆப்பில் இணையப்பக்கத்தில் செல்போனை ஆடர் செய்துள்ளார். ஆனால் DHL கிடங்கிலிருந்து டெலிவரி செய்யப்பட்டபோதுதான் தவறு நிகழ்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு 1 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்கு பதில் சாக்லேட்டுகள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.