தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் நடித்த வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வினோத் இயக்கத்தில் உருவாகி, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதை பற்றி பேசிய வினோத், நேர்கொண்டபார்வை தொடர்ந்து அஜீத்தை இயக்கும் வாய்ப்பு மீண்டும் எனக்கு கிடைத்துள்ளது. ஒரு மாஸ் ஹீரோவை வைத்து உருவாகும் படம் என்றால் அதில் அனைத்தும் இருக்கவேண்டும். அப்படி தான் இன்றைய வாழ்க்கையில் நாம் மறந்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு கதை களத்தை உருவாக்கி படத்தை எடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.