Categories
தேசிய செய்திகள்

தேசத்தந்தை குறித்து சர்ச்சை கருத்து…. சாமியார் மீது வழக்கு பதிவு….!!

மத்திய பிரதேச தலைநகர் ராய்ப்பூரில் நேற்று இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மராட்டியத்தை சேர்ந்த காளிசரன் மகாராஜா என்ற சாமியார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, மதத்தை காப்பது நமது முதல் கடமையாகும். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அரசியல் நாம் இந்து மத தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நமது வீட்டில் உள்ள பெண்கள் மிகவும் சிறப்பானவர்கள் மற்றும் நாகரீகமானவர்கள். அவர்கள் தேர்தலில் வாக்களிக்க செல்வதில்லை. கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது உங்கள் குடும்ப பெண்களுக்கு என்ன ஆகும். ‘

முட்டாள்கள்’ வாக்களிக்க வெளியே செல்லாதவர்களை நான் அழைக்கிறேன். அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் அரசியல் மூலம் நம் நாட்டை கைப்பற்றுவது நோக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் 1947ஆம் ஆண்டு நமது கண் முன்னாடியே இந்தியாவில் கைப்பற்றினார்கள் அதற்கு முன்னதாக ஈரான் ஈராக் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கைப்பற்றினர். கைப்பற்றினர். மேலும் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளையும் அவர்கள் அரசியல் மூலம் கைப்பற்றினார்கள். காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை வணங்குகிறேன் என்று அவர் கூறினார். இவ்வாறு மகாத்மா காந்தி மீது தவறான கருத்தை கூறிய சாமியார் காளிசரண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |