Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: நாடு முழுவதும் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய  ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. இந்தியாவில் இதுவரை 578 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம், டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், புத்தாண்டு உட்பட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பொது ஏடங்கைள கூட்டம் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவுகளை கூட மாநில அரசுகள் பிறப்பிக்கலாம்.

மேலும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கையும்அமலுக்கு கொண்டு வரலாம். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதிகளில் சூழலுக்கு ஏற்றவாறு தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம். ஆகவே மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலங்களே முடிவு எடுக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |