Categories
உலக செய்திகள்

“ஒரு வீடியோ போட்டது குத்தமாடா!”…. பாகிஸ்தான் பிரதமருக்கு எழுந்த விமர்சனங்கள்….!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பனிச் சிறுத்தைகள் தொடர்பில் பதிவிட்ட வீடியோவிற்கு  விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கும் கப்லு என்னும் இடத்தில் அரிய வகையான பனிச்சிறுத்தைகள் நடந்து சென்றுகொண்டிருப்பதை, அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் வீடியோ எடுத்து, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதனைப் பார்த்த மக்கள், பிரதமரை விமர்சித்து வருகிறார்கள். அதாவது, நாடு பணவீக்கம் மற்றும் வறுமையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் சுற்றுலாவிற்கு செல்வதில் தான் அதிக கவனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

Categories

Tech |