Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் மோடி அரசு கொடுக்கும் பெரிய ஷாக்…. அமித் மித்ரா பரபரப்பு….!!!

ஜிஎஸ்டி உயர்வு தொடர்பாக அமித் மித்ராவின் டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகரும் முன்னாள் நிதி துறை அமைச்சருமான அமித் மித்ரா அவர்கள் மத்திய அரசு ஜவுளித்துறை காண ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்து இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஜிஎஸ்டி உயர்வு அமலுக்கு வந்தால் ஒரு லட்சம் ஜவுளித்துறை யூனிட்டுகளை மூடும் அபாயம் ஏற்படும். இதனால் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் தேதி 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜவுளி பொருட்கள் ஜிஎஸ்டி 5 சதவீதம் முதல் 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த விலையானது வரும் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைத்து மித்ரா இந்த ஜிஎஸ்டி உயர்வு ஒட்டுமொத்த ஜவுளித் துறையின் சங்கிலியை நிலைகுலையச் செய்யும். ஜிஎஸ்டி 12 சதவீதம் உயர்த்தப்படுவதால் ஜவுளித்துறை யூனிட்டுகள் மூட படுதல், வேலை இழப்பு ஆகிய பாதிப்புகள் மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு கூறுகளும் ஆட்டம் காணும்.

இதுதொடர்பாக அமித் மிஸ்ரா தனது ட்விட்டரில் “ஜனவரி 1ஆம் தேதி மற்றொரு பெரிய தவறை செய்வதற்கு மோடி அரசு காத்துள்ளது. அதாவது ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். ஒரு லட்சம் யூனிட்டுகள் மூடப்படும் இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். கோடிக்கணக்கான சாமானிய மக்கள் மீது தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி விழுவதற்குள் ஜிஎஸ்டி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |