Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம் செலுத்திய ரசீதில்…. ஜிஎஸ்டி வரி வசூல்…. நுகர்வோர் அதிர்ச்சி…!!!!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் கடந்த 2017ஆம் வருடம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி வசூல் முறைக்கு கடுமையான எதிர்ப்புகள் இன்றளவும் நிலவி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்திய ரசீதில் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின் பயன்பாடு கட்டணத்திற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்குத் தரப்பட்ட ரசீதில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக இது வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை என்பதால் நுகர்வோர் குழப்பமடைந்துள்ளனர்.

Categories

Tech |