கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிவேகத்தில் உயர்ந்தது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
இதனை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 20 ஆயிரத்து 984 பேருக்கு ரூபாய் 50,000 வழங்க ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.