Categories
மாநில செய்திகள்

“நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது”…. அண்ணாமலை பேச்சு….!!!

நீட் தேர்வு மூலமாக சாதாரண மாணவர்களும் மருத்துவம் சேர்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். மருத்துவ படிப்பு இடங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நீட் தேர்வு மூலம் சாதாரண கிராமப்புற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.

2015 – 16 ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் 2021 ஆம் ஆண்டும், நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது அனைவரும் பழைய கதைகளை பேசி வருகிறார்கள். நீட் வெற்றி குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை ? நீட் தேர்வு வந்த பிறகு தனியார் கல்லூரிகளிலும் அரசு கல்லூரிகளிலும் எத்தனை பேர் சேர்ந்துள்ளார்கள்?” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |