Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு….. அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

இந்திய நாட்டில் விவசாயிகளுக்கு நன்மை தரும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் 6,000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த நிதியுதவியானது அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவி தொகையானது ஒவ்வொரு வருடத்துக்கும் 3 தவணைகளாக வழங்கப்படும்.

அதாவது ஒவ்வொரு தவணையின் போது தலா 2000 ரூ வரை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆதார் விவரங்களும் இணைக்கப்பட்டு உள்ளதால் தரவுத்தளத்தில் அவர்களை குறித்த அனைத்து தகவல்களும் இருக்கும். இத்திட்டத்தில் இருபவ்ரகள் கட்டாயமான முறையில் இ-கேஒய்சி செய்து இருக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த இ-கேஒய்சி-யை செய்யாதவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தவுள்ள 2000 ரூ வழங்கப்பட மாட்டாது என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் வழங்கப்படும் நிதி தொகை தங்களது வங்கி கணக்கில் வருமா? இல்லையா? என்று சரிபார்க்க கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. முதலில் https://pmkisan.gov.in என்ற PM Kisan Yojana-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதன்பின் அதில் விவசாயிகள் கார்னர் (Farmer’s Corner section) என்பதில் பயனாளிகள் பட்டியல் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

3. தற்போது கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து தங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. அடுத்து ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. இறுதியாக பயனாளிகளின் முழுமையான பட்டியல் திரையில் தோன்றும் அதில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

அதேபோன்று பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் வழங்கும் தவணை நிலைகளை தொடர்பாக அறிந்துகொள்ள கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. முதலில் PM Kisanயின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. பின் வலது புறத்தில் உள்ள விவசாயிகள் கார்னரைக் கிளிக் செய்து அதில் பயனாளி நிலை (Beneficiary status) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்பொது புதிய பக்கம் திறக்கப்படும். அதில் தங்களின் ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

4. இறுதியாக தங்களின் தவணை நிலை பற்றிய முழுமையான தகவலை பெற முடியும்.

Categories

Tech |