ஸ்பெயினில் உள்ள லா பல்மா தீவில் கடந்த 19ஆம் தேதி அன்று கும்பிரே வியாகா என்ற எரிமலை குமுற தொடங்கியது. இந்த எரிமலை இந்த மாதம் 13ம் தேதி என்று சீற்றத்தில் நிறுத்தி உள்ளது. இதையடுத்து எரிமலை மீண்டும் குமறத் தொடங்கலாம் என்று கிறிஸ்மஸ் வரை அதிகாரிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஏரிமலை தணிந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் 3000 கட்டிடங்கள் மற்றும் வாழைத் தோட்டங்களும் சேதமடைந்துள்ளது. எனவே அந்தத் தீவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.