Categories
சினிமா

ராக்கி படக்குழுவிற்கு… சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த பிரபல நடிகர்…. வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் சினிமா திரையுலகில் செல்வராகவன் பிரபலமான இயக்குனர் ஆவர். இவர் முதன்முறையாக சாணிக் காணிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ராக்கி படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ‘ராக்கி’ திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ரவுடி பிக்சர் நிறுவனம் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரைகளில் வெளியானது. மேலும் இந்த படம் மக்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராக்கி திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செல்போன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் ராக்கி படக் குழுவினரையும் பாராட்டினார். மேலும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் வசந்த் ரவி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகிறது.

Categories

Tech |