Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 % இருந்து 28 % உயர்த்தியது. இதனையடுத்து மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு 9,488.70 கோடி ரூபாய் செலவாகும்.

இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதரர்களுக்கும் பயன் பெறுவர் என்றும் தெரிவித்துள்ளது. அதன்பின் மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது. ஹரியானாவில் அரசு ஊழியர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புத்தாண்டு பரிசாக 3% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து அகவிலைப்படி நிவாரணமும் 3 விழுக்காடு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஹரியானா அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதேபோன்று தொடர்ந்து அடுத்த மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு மீண்டும் புத்தாண்டு பரிசாக மேலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடுத்த அகவிலைப்படி உயர்வு தொடர்பாக ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அகவர் அகவிலைப்படி உயர்வு கிடைத்தால் அடிப்படை ஊதியம் உயரும்.

Categories

Tech |