மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள கல்வா சாய்பாபா நகரில் பைப்லைன் பகுதியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மாத மகன் ஸ்ரீகாந்த் என்பவர் உள்ளார். வீட்டில் ஐந்து மாத குழந்தை தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சாந்தி கடைக்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது நாங்கள் ஸ்ரீகாந்த் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி பார்த்த போது எங்கும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கல்வா போலீசில் சாந்தி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன குழந்தை ஸ்ரீகாந்த் வீட்டு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை யாரோ கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குற்றவாளியை தேடி வருகின்றனர்.