Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் மனம் குளிர…. நிரந்தர நடைபாதை…. மெரீனாவில் அமைக்கப்படுமா….? தொடரும் கோரிக்கை….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நிரந்தர நடைபாதை அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள கடல்களிலேயே நீண்ட பெரிய கடற்கரை என்றால் அது மெரினா கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை இது. எழில்கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு மணலில் நடந்து கடலில் கால் நனைத்து வந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது பெரும் கனவாக இருக்கிறது. பெரும்பாலானவர்களால் மெரினா கடற்கரையின் நீண்ட மணல் பரப்பில் நடந்து செல்ல முடியாது. அதற்கு நடந்து செல்வது கடினம் என்பதால் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் கால் நனைப்பது என்பது எட்டாத கனியாக இருந்து வருகின்றது.

பண்டிகை காலங்களில் மட்டும் தற்காலிக நடைபாதை அமைப்பதை சென்னை மாநகராட்சி வழக்கமாக வைத்துள்ளது. அதாவது கடற்கரை சாலையில் இருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்த பாதை வழியாக மூன்று சக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்றுவர முடியும். ஆனால் இது தற்காலிக பாதைதான். குறிப்பிட்ட காலம் வரைக்கும் இதைப் போட்டு வைத்திருப்பார்கள். அதன்படி, தற்காலிக நடைபாதையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த பாதையில் தங்களது சொந்த வீல் சேர்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். வீல் சேர் இல்லாதவர்கள் வசதிக்காக மாநகராட்சியே ஊழியர்களுடன் வீல் சேர்களை தயார் நிலையில் வைத்திருக்கும். அவற்றை பயன்படுத்தியும் சென்று வரலாம். ஆனால் இந்த தற்காலிக நடைபாதையை நிரந்தரமாக தரமானதாக அனைத்து வசதிகளுடன் கூடியதாக அமைக்க வேண்டும் என்று பல மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நல்ல அகலமான நடைபாதை நிரந்தரமாக அமைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முன் வர வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றனர். இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Categories

Tech |