Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதி விஜய் பட பாடல்…. செந்தில் ராஜலட்சுமியின் ஆசை….!!!!

விஜய் டிவி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் பிரபலமான தம்பதியினர் செந்தில்- ராஜலட்சுமி. அந்த சீசனில் வெற்றி பெற்று 50,00,000 ரூபாய் பரிசு வென்றவர்கள். மேலும் அந்த விழாவில் ராஜலட்சுமிக்கு மக்களின் குரல் என்று சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சினிமாவிலும் இருவரும் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இவர்கள் காம்போவில் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

மேலும் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய ஹே சாமி பாடல் இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் இவர்கள் விஜய் 66-ல் பாடல் பாடி உள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது. இது பற்றி செந்தில் கூறுகையில், நானும் என் மனைவியும் விஜய் 66 படத்தில் நாங்கள் பாட்டு படிக்கிறோம் என்ற செய்தி வெளியாகும் போது அதிர்ச்சியாக இருந்தது. இது வெறும் வதந்தி தான். அஜித் படத்தில் பாடிட்டோம். ஆனால் விஜய் படத்திலும் பாட ஆசையாகத்தான் இருக்கிறது. ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |