சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ராதாமங்கலம் கிராமத்தில் தங்கவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் 1-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக அந்த சிறுமியை முதியவர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்கவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேலுக்கு பாலியல் தாக்குதல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். மேலும் பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனையடுத்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்பின் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ததையடுத்து தங்கவேலுவை காவல்துறையினர் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.