Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை வலிமையாக்க உதவுங்க…. ரூ.1000 நன்கொடை அளித்த பிரதமர்….!!!

பிரதமர் மோடி பாஜக கட்சி தொண்டர்களிடம் சிறிய அளவிலான தொகையை நன்கொடையாக கட்சிக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் வெளியிட்டுள்ள்ளார். அதில், “பாஜகவின் கட்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடையாக அளித்து உள்ளேன். அதனைப்போலவே தொண்டர்களும் பாஜகவை  வலுவாக்குவதற்காக நிதி உதவி அளித்து உதவ வேண்டும். எப்பொழுதும் தேசத்திற்காக முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தாந்தமும், வாழ்நாள் முழுவதும் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்ற தமது தொண்டர்களின் கலாச்சாரமும் நீங்கள் அளிக்கும் நன்கொடை மூலம் தெரியவரும்.

எனவே பாஜகவை வலுவாக்க உதவுங்கள் இந்தியாவில் வலிமையாக்க உதவுங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் ரூ.1000 நன்கொடையாக கட்சி நிதிக்காக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, “நமோ செய்லி மூலம் பாஜக வலுவாக்க எனது பங்களிப்பை அளித்து உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |